தமிழகம்

துபாயில் இரு ஆண்டுகளாக தவிக்கும் 23 மீனவர்களை மீட்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்: பாதிக்கப்பட்டோரின் மனைவியர் பேட்டி

செய்திப்பிரிவு

அரபு நாட்டில் வழக்கு ஒன்றில் சாட்சியாக சேர்க்கப்பட்ட காரணத் தால் 2 ஆண்டுகளாக அவதிப்படும் 23 மீனவர்களையும் தேர்தலுக்கு முன்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், 10 மீனவ கிராம மக்கள் இத்தேர்தலைப் புறக்கணிப் பார்கள் என்று பாதிக்கப்பட்டோரின் மனைவியர் தெரிவித்தனர்.

இதுகுறித்து தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருள்தந்தை சர்ச்சில் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 23 மீனவர்கள் துபாயில் அஜுமன் பகுதியில் மாத்தர் அலி மார்த் தாருக்குச் சொந்தமான விசைப்படகில் 2014, ஏப்ரல் 4-ம் தேதி அரேபிய மீனவர்கள் இருவருடன் மீன்பிடித்தபோது, கமீஸ் என்ற அரேபிய மீனவர் கடலில் மாய மானார்.

வெளிச் சிறையில் அடைப்பு

அஜுமன் பகுதி காவல்துறை யினர் விசாரணைக்குப் பின்பு இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதித்தனர். ஆனால், அரேபிய முதலாளி 23 மீனவர்களின் ஆவணங்களையும் பறிமுதல் செய்துவைத் துக் கொண்டார். இவ்வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட இவர்கள் வெளிச்சிறையில் அடைக்கப்பட்டனர். 2 ஆண்டுகள் ஆகியும் 23 பேரும் தாயகம் திரும்பவில்லை. அதனால் அவர்களது குடும்பத்தினர் வறுமை யின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

எனவே, இந்த வழக்கை விரைந்து முடித்து, 23 பேரும் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர் குடும்பங்களுக்கு தினப்படியாக ரூ.250 கொடுப்பது போல, துபாயில் வெளிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களின் குடும்பங்களுக்கும் தினப்படி ரூ.250 வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவை கோரு கிறோம் என்றார் அருள்தந்தை சர்ச்சில்.

பாதிக்கப்பட்டவர்களின் மனை வியர் சார்பில் ஸ்டார்லின், ரோஸ் ஆகியோர் பேசும்போது, “அரபு நாட்டில் 2 ஆண்டுகளாக தவிக்கும் 23 மீனவர்களையும் தேர்த லுக்கு முன்னதாக மத்திய, மாநில அரசுகள் மீட்காவிட்டால், எங்கள் குடும்பத்தினர் மட்டுமல்லாமல், புத்தன்துரை, கோவளம், ராஜாக்க மங்கலம்துறை, இடிந்தகரை உள்ளிட்ட 10 மீனவ கிராம மக்களும் இத்தேர்தலைப் புறக்கணிப்பார்கள்” என்றனர்.

SCROLL FOR NEXT