‘ஆரோவில்லின் ஆன்மா’ எனப்படும் மாத்ரி மந்திர் பகுதியைப் பார்வையிட்டதமிழக ஆளுநர் ரவி மற்றும் தெலங்கானா மற்றும் புதுச்சேரிக்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். 
தமிழகம்

ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாகக் குழுவில் தமிழக, புதுவை ஆளுநர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

புதுவையை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்ட எல்லையில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இந்த நகரின் பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தலைவர் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பருடன் முடிவடைந்தது. புதிய தலைவராக தமிழக ஆளுநர் ரவி கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டனர்.

தமிழக ஆளுநரும், ஆரோவில் தலைவருமான ரவி தலைமையில் நேற்று ஆரோவில்லின் முதல் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.

இதில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் காலை தொடங்கி மதியம் வரை நடந்தது.

இக்கூட்டம் தொடர்பாக விசாரித்தபோது, "ஆரோவில் வளர்ச்சிப் பணிகள், புதிய திட்டங்கள், பாதுகாப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது" என்று குறிப்பிட்டனர்.

முன்னதாக, தமிழக, புதுவை ஆளுநர்கள் ஆரோவில் அமைதி மையத்தை பார்வையிட்டனர்.

SCROLL FOR NEXT