தமிழகம்

காந்திய மக்கள் இயக்கத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் திண்டுக்கலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

காந்திய மக்கள் நல இயக்கமும், அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியும் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை மற்றும் ஊழல் அற்றவர்களை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுகிறது.

விஜயகாந்த்தை தங்கள் கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நல கூட்டணியினர் எப்படி மாற்று அரசியலை ஏற்படுத்த முடியும். விஜயகாந்தின் குடும்ப அரசியலை எப்படி ஏற்க முடியும்.

இதுவரை நாங்கள் 26 வேட்பாளர்களை அறிவித்திருக்கிறோம். 2021 தேர்தல்தான் எங்கள் இலக்கு. எங்கள் கூட்டணி போட்டியிடாத இடங்களில் மக்கள் நலக்கூட்டணியை ஆதரிப்போம்.

எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ளது என்றார்.

          
SCROLL FOR NEXT