அரியலூர் மாவட்டத்தில் தொடர்மழையால் 2 தரைப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கின
அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ 01) காலை முதல் மாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை இடைவிடாது பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக அரியலூர் அருகேயுள்ள கயர்லாபாத் - மண்டையன்குறிச்சி கிராமங்களை இணைக்கும் கல்லாத்து ஓடையில் தண்ணீர் அதிக அளவு சென்றதால் தரை பாலம் மூழ்கியது.
இதனால் பொது மக்கள் 10 கி.மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதே போல் சுண்டக்குடி அருகே வல்லகுளம் ஓடையில் தண்ணீர் அதிக அளவு சென்றதால் சுண்டக்குடி - வல்லகுளம் இடையேயான தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று (நவ 02) காலை மழையில்லாத நிலையில் மேற்கண்ட ஓடைகளில் தண்ணீர் குறைய தொடங்கியதால் போக்குவரத்து பாதிப்பு நீங்கியது.
மாவட்டம் முழுவதுமே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.