தமிழகம்

யாருடன் கூட்டணி: மமக 6-ம் தேதி முடிவு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக் குழு வரும் 6-ம் தேதி கூடுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மனிதநேய மக்கள் கட்சி விரும்புகிறது. அதிமுக கூட்டணியில் மமக இடம்பெறும் என்று டெல்டா மாவட்ட அமைச்சர் ஒருவர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வமாக அதிமுக எதையும் அறிவிக்கவில்லை. திமுக தரப்பில் இருந்தும் கூட்டணிக்காக மமகவை அணுகி வருகின்றனர். இந்நிலையில், கூட்டணி குறித்து விவாதிப்பதற்காக மமகவின் உயர்நிலைக் குழு சென்னையில் வரும் 6-ம் தேதி கூடுகிறது. அதில், கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT