தமிழகம்

வதந்திகளை நம்ப வேண்டாம்: கூட்டணி குறித்து யாருடனும் பேசவில்லை - தேமுதிக திடீர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கூட்டணி குறித்து யாருடனும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திர குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிக என்ன முடிவெடுக்கப் போகி றது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களுக்கு உள்ளது. தேமுதிக தலை வர் விஜயகாந்த் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்பாகவே ஒரு சிலரால் திட்டமிட்டு வதந்தி கள் பரப்பப்படுகின்றன. அதை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்தியாக வெளியிடுகின்றன.

தேமுதிகவுக்கும் ஒரு கட்சிக்கும் கூட்டணி உடன்பாடு முடிந்துள்ளது என்றும், 59 தொகுதிகள் தேமுதிகவுக்கு என பேசி முடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், இன்னொரு கட்சியுடன் ரகசியமாக பேசிக்கொண்டு இருப்ப தாகவும், பல கோடி ரூபாய் பணம் கைமாறிவிட்டதாகவும், பேரத்தை அதிகரிக்கவே விஜயகாந்த் அமைதியாக இருக்கிறார் என்றும் கற்பனைக்கே எட்டாத வகையில் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

உண்மையில் இந்த நொடி வரை யாருடனும் கூட்டணி பற்றி விஜயகாந்த் பேசவே இல்லை. கூட்டணி குறித்து அவர் அறிவிப்பதே உண்மையான முடிவாகும். தேமுதிக என்ற கட்சியை 2005-ல் ஆரம்பித்து, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தி யில் இந்த அளவுக்கு கட்சியை வளர்த்தவருக்கு அதை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியாதா? மக்களின் நலன் கருதி அவர் எடுக்கும் எந்தவொரு தைரியமான முடிவும், நல்ல முடிவாகவே இருக்கும். அந்த நல்ல முடிவை தேமுதிக நிர்வாகி கள் மற்றும் தொண்டர்கள் மட்டு மல்ல, தமிழக மக்களும் ஏற்றுக் கொள்வர். எனவே, விஜயகாந்த் பற்றியும் தேமுதிக பற்றியும் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் சந்திரகுமார் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT