பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்த ஆண்டு மகாவீரர் நினைவு தினத்தில் தீபாவளி வருவதால், இறைச்சி கடைகளை அடைக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தீபாவளி திருநாளில் பெரும்பான்மையான மக்கள் விருப்பப்படுவதால் இறைச்சி கடைகளை அனுமதிப்பதாக அரசு கூறுவது சட்டப்படி தவறு. ஜைன சிறுபான்மை சமுதாயத் துக்கு எதிரான செயல்.
எனவே, மதச்சார்பற்ற அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, சிறுபான்மை மதத்தினரின் நம்பிக்கைகளை சிதைக்கும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றங்கள் இதுகுறித்து அளித்த தீர்ப்புகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.