சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக இணைந்து ’புரொபஷனல்ஸ் 4 அன்புமணி’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.
டாக்டர்கள், இன்ஜினீயர்கள், தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறையினர் ஒன்றாக இணைந்து ’புரொபஷனல்ஸ் 4 அன்புமணி’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம், உறுப்பினர்கள் நவீன், மீனாட்சி, நாகராஜ் உள்ளிட்ட பலர் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டி:
தமிழக முதல்வராக அன்புமணி ராமதாஸ் தகுதியானவர். அவருடைய கடந்த கால சாதனைகள், எதிர்கால திட்டங்கள், செயல்பாடுகள், நல்ல குணங்கள் போன்றவை பிடித்திருக் கிறது. அதனால் அவருக்காக ’புரொபஷனல்ஸ் 4 அன்புமணி’ என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறோம். இந்த அமைப்பில் பல்வேறு துறை களைச் சேர்ந்த 157 பேர் இருக்கிறோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி ராமதாஸை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது பதிவு செய்யப்படாத அமைப்பு. தேர்தல் முடிந்த பிறகு அமைப்பை கலைத்துவிடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.