தமிழகம்

தீபாவளியன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அரசு அனுமதி

செய்திப்பிரிவு

தீபாவளியன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT