சவுதியில் கொத்தடிமைபோல் நடத்தப்படும் தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திரு வாடானை வட்டம் திருப்பாலைக் குடி, மோர்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு, தொண்டி புதுக்குடி, சோழியக்குடி, பாசிப்பட்டினம், கடலாடி வட்டம் வாலிநோக்கம் ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த 45 மீனவர்கள் சவுதி அரேபியா வுக்கு மீன்பிடி ஒப்பந்த தொழி லாளர்களாகச் சென்றனர். அங்கு சித்தாவில் உள்ள தனியார் மீன் பிடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர் கள் 45 பேர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 7 பேர், கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 61 மீனவர்களுக்கு சம்பளம் தராமலும், சரியாக உணவு கொடுக்காமலும் சவுதி மீன்பிடி படகுகளின் உரிமை யாளர் ஒரே இடத்தில் கொத்தடிமை போல் அடைத்து வைத்து கொடு மைப்படுத்துவதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் அவர்களின் குடும்பங் களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 45 மீனவர் களின் குடும்பத்தினர் மற்றும் அவர் களது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு வந்தனர். ஆட்சியர் அலு வலக நுழைவு வாயிலில் அவர் களை போலீஸார் தடுத்து நிறுத்தி 10 பேர் ஆட்சியரைப் பார்க்க அனுமதித்தனர்.
இதில் வழக்கறிஞர் திருமுருகன், தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் கூட்டமைப்பு (சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், மாவட்டச் செயலர் கருணாமூர்த்தி உள்ளிட்ட மீனவப் பிரதிநிதிகள் ஆட்சியர் ச.நடராஜனை சந்தித்து, மீனவர் களை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவரவும், அவர்களுக்கு சம்பளத்தை பெற்றுத் தரவும் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார்.