தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசி, விருதுநகர், சாத்தூர், வில்லிபுத்தூர், ராஜபாளையம் நகரப் பகுதி களிலும், பை-பாஸ் சாலைகளையொட்டியும் 1,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் திறக்கப்பட் டுள்ளன. பெரும் பாலான நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன.இந்நிலையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பட்டாசு விற்பனையா காததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து பட்டாசு விற்பனை யாளர் சாந்தி மாரியப்பன் கூறிய தாவது: கரோனா ஊரடங்கு மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கு காரணமாகவும், வட மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டதாலும் இந்த ஆண்டு பட்டாசுக்கான ஆர்டர் குறைவாகவே வந்தது. இதனால் பட்டாசு உற்பத்தியும் குறைந்த அளவிலேயே இருந்தது.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவ னங்களில் இருந்து வரும் வழக்கமான ஆர்டர்கள் இந்த ஆண்டு வரவில்லை. கிப்ட் பாக்ஸ் விற்பனையும் சரிந்துவிட்டது என்று கூறினார்.