தமிழகம்

மோடி தலைமையிலான ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவுமில்லை: பாஜக தேசிய பொதுச் செயலாளர் கருத்து

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாளையொட்டி காரைக்கால் மாவட்டம் நிரவியில் பாஜக ஓபிசி அணி சார்பில் நேற்று நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், பாஜக தேசிய பொதுச் செயலாளர் புரந்தேஸ்வரி, புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக, திருநள்ளாறு கடைத்தெருவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் புரந்தேஸ்வரி கூறியது: புதுச்சேரியில் பாஜக வளர்ச்சியடைந்துள்ளது. புதுச்சேரியில் அமைந்துள்ள பாஜக கூட்டணி அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் புதுச்சேரியில் முறையாக அமல்படுத்தப்படுகின்றன. சிறந்த நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியில் இதுவரை யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. நாட்டில் உள்ள ஏழை மக்கள் நலனுக்காக பிரதமர் பணியாற்றி வருகிறார் என்றார்.

பாஜக மாநில துணைத் தலைவர்கள் எம்.அருள்முருகன், வி.கே.கணபதி, நளினி கணேஷ்பாபு, மாவட்டத் தலைவர் ஜெ.துரைசேனாதிபதி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT