சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் இளங்கோ, திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக யாதவர்கள் உள்ளனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளோம். ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சைக்கிள் சின்னத்தில் தேர்தலைச் சந்திக்கவுள்ளோம். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
மதுரையில் ஏப்ரல் 16-ல் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்றார்.