கோடை விடுமுறையையொட்டி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சென்னையில் இருந்து 200 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
விடுமுறை நாட்களில் சென்னையைச் சேர்ந்த பலர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக் கும் செல்வது வழக்கம். எனவே பயணிகளின் நெரிசலைக் குறைப்ப தற்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோடை காலத்தில் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும், எந் தெந்த சுற்றுலா மையங்கள் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்குவது என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.
இந்த முறை சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளதால் மக்கள் கூட்டம் எப்படி இருக்கும் என தெரிய வில்லை. எனவே, குறைந்தபட்சமாக 200 சிறப்பு பஸ்களை இயக்க திட்ட மிட்டுள்ளோம். பின்னர், தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு பஸ்கள் இயக்கப் படும். நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் போக்குவரத்துத் துறை இணையதளத்தில் (http://www.tnstc.in/) முன்பதிவு செய்து கொள்ளலாம்’’என்றனர்.