தமிழகம்

முசிறி அருகே கல்லூரி பேருந்து, கார் மீது வேன் மோதி விபத்து: 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தனியார் கல்லூரி பேருந்து மற்றும் கார் மீது வேன் மோதிய விபத்தில், வேனில் வந்த 5 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட் டியைச் சேர்ந்த சிலர் வேனில் வேளாங்கண்ணிக்குப் புறப்பட்ட னர். சேலத்தைச் சேர்ந்த ராமராஜ் (24) வேனை ஓட்டினார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மஞ்சக்கோரை பகுதியில் நாகூர் நோக்கிச் சென்ற காரை முந்துவதற்கு வேன் ஓட்டுநர் முயன்றார். அப்போது, எதிரே திருப்பைஞ்சீலியில் இருந்து தொட்டியம் நோக்கிச் சென்ற தனியார் கல்லூரி பேருந்து மீது வேன் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநர் ராமராஜ், வேனில் பயணம் செய்த சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த செல்வம் மனைவி வர்ஷா (55), முரளி மனைவி தாரணி (26), ரவி மனைவி மகாலட்சுமி (40), மற்றொரு செல்வம் என்பவரின் மனைவி மகேஸ்வரி (58) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கல்லூரி பேருந்து மீது மோதிய அதே வேகத்தில் கார் மீதும் மோதிய வேன் சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் இறங்கியது. இந்த விபத்தில் பஸ், வேன், கார் ஆகியவற்றில் பயணம் செய்த 21 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து வாத் தலை போலீஸார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பார்வை யிட்டு விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT