மதுரையில் நடந்த வங்கி - வாடிக்கையாளர் சந்திப்பு சிறப்பு நிகழ்ச்சியில் கடனுதவிக்கான காசோலையை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

வங்கிகள் கடன் வழங்க தவறினால் கந்து வட்டி கொடுமை அதிகரிக்கும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து

செய்திப்பிரிவு

வங்கிகள் கடன் தரத் தவறினால் கந்துவட்டிக் கொடுமை அதிக ரிக்கும் என்று அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித் துள்ளார்.

மதுரை மாவட்ட வங்கிகள் இணைந்து வங்கி - வாடிக்கை யாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை மடீட்சியா அரங்கில் நடத்தின.

சு.வெங்கடேசன் எம்.பி. தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரூ.362.25 கோடி கடனுதவிகளை வழங்கி பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்தவுடன் நிவாரண உதவி, கடன் தள்ளுபடி என்ற வகையில் மக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி தரப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்கேற்ப பொதுத்துறை வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும். வங்கிகள் கடன் தரத் தவறினால் கந்து வட்டிக் கொடுமை அதிகரிக்கும் என்று கூறினார்.

இதில், மாவட்ட திட்ட இயக்குநர் அபிதா ஹனிஃப், கனரா வங்கி பொது மேலாளர் டி.சுரேந்திரன், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் அமித்வர்மா மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT