கரூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர் பாக 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் அருகேயுள்ள ராமகவுண் டன்புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ் ஆரோக்கியசாமி(28). அதே பகுதியைச் சேர்ந்த சந்தானம் மகள் கஜப்பிரியா(27). வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்துள்ளனர். சில மாதங் களுக்கு முன் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலை யில், திருமணமான சில வாரங் களிலேயே சுரேஷ் ஆரோக்கிய சாமியைப் பிரிந்த கஜப்பிரியா, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுரேஷ் ஆரோக்கியசாமி ஆட் கொணர்வு மனு தாக்கல் செய் தார். நீதிமன்றத்தில் ஆஜரான கஜப்பிரியா, பெற்றோருடன் செல்வதாக கூறிச் சென்றுவிட்டார். இதையடுத்து, கஜப்பிரியா குடும்பத்துக்கு சுரேஷ் ஆரோக்கி யசாமி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கரூர்-ஈரோடு சாலையில், ஆத்தூர் பிரிவு அருகேயுள்ள டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்த சுரேஷ் ஆரோக்கியசாமியை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சுரேஷ் ஆரோக்கியசாமி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கஜப்பிரியா வின் சகோதரர் சிவநேசன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.