தமிழகம்

பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத்,சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைஅளித்திருந்தார். அதில், “சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் கல்யாணராமன்(55) என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறுமதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும், மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ளசைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட னர். இதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன்,கடந்த 2 மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் கல்யாணராமனை கடந்த 16-ம்தேதி கைது செய்தனர். இந்நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, கல்யாணராமன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT