சென்னை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அலுவலர்களை மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.சந்திரமோகன் நேற்று நியமித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பி.சந்திரமோகன், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்குமான தேர்தல் பதிவு அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்களை நேற்று நியமித்தார்.
அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள தொகுதி தேர்தல் அலுவலர்கள் விவரம் வருமாறு:
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை இயக்குநர் டி.என்.பத்மஜா தொகுதி தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பூர் தொகுதிக்கு சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.அழகு மீனா, கொளத்தூர் தொகுதிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை இணை ஆணையர் எஸ்.பி.கார்த்திகா, வில்லிவாக்கம் தொகுதிக்கு மாநில தொழில் மேம்பாட்டுக் கழக பொது மேலாளர் பி.குமரவேல் பாண்டியன், திரு.வி.க.நகர் தொகுதிக்கு தமிழ்நாடு கரும்பு கழக பொதுமேலாளர் மகேஸ்வரி ரவிக்குமார், எழும்பூர் தொகுதிக்கு கணக்கெடுப்பு மற்றும் தீர்வு இயக்குநரக தீர்வு அலுவலர் எஸ்.சங்கீதா, ராயபுரம் தொகுதிக்கு சிறுதொழில் மேம்பாட்டு கழக பொதுமேலாளர் கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துறைமுகம் தொகுதிக்கு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார கூடுதல் இயக்குநர் என்.காளிதாஸ், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழக பொதுமேலாளர் எம்.வீரப்பன், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு தமிழ்நாடு மூலிகைப் பண்ணை மற்றும் மூலிகை மருந்து கழக பொதுமேலாளர் எம்.எஸ்.சங்கீதா, அண்ணாநகர் தொகுதிக்கு அரசு கேபிள் டிவி நிறுவன பொதுமேலாளர் கே.பிரியா, விருகம்பாக்கம் தொகுதிக்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ஆர்.திவாகர், சைதாப்பேட்டை தொகுதிக்கு குடிசை மாற்று வாரிய செயலர் கே.பொற்கொடி, தியாகராயநகர் தொகுதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் கவிதா ராமு, மயிலாப்பூர் தொகுதிக்கு தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழக பொதுமேலாளர் எஸ்.அமிர்த ஜோதி, வேளச்சேரி தொகுதிக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவன இணை இயக்குநர் எஸ்.கந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர்.