சமக வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சமக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விருப்ப மனு பெறுதல், நேர்காணல் ஆகிய நிகழ்ச்சிகள் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 28 முதல் கடந்த 4-ம் தேதி வரை நடந்தன. 234 தொகுதிகளில் இருந்தும் 3,060 பேர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து சமக உயர் நிலைக் குழு கூடி இறுதி வேட்பாளர் பட்டியலை தயாரிக் கும். அந்தப் பட்டியலை விரைவில் வெளியிடுவேன். தொடர்ந்து வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தப்படும். பின்னர், வேட்புமனு தாக்கல், நடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக வேட் பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் படும். சமகவின் தேர்தல் அறிக்கையும் விரைவில் வெளியிடப் பட உள்ளது. இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.