தமிழகம்

நியாயமான விலையில் யூரியா கிடைக்க நடவடிக்கை: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சம்பா சாகுபடிக்கு உரங்களின் தேவை அதிகரித்து வருவதால், நியாயமான விலையில் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சம்பா சாகுபடி செய்து வரும் டெல்டா மாவட்டங்களில் உரங்களின் தேவை அதிகரித்து வருகிறது. பயிர்களின் வளர்ச்சிக்கு நைட்ரஜன் தேவை என்பதால், யூரியாவின் தேவை தற்போது அதிகரித்து வருகிறது.

இதை உணர்ந்து, கூடுதல் உரம் வழங்குமாறு மத்திய உரத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அதேசமயம், தனியார் உரக்கடைகளில் யூரியா தவிர, பிறஉரங்கள் தேங்கியுள்ளன. இதனால், யூரியா வாங்க வரும்விவசாயிகளை, பிற உரங்கள்வாங்குமாறு தனியார் வியாபாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர்.

எனவே, விவசாயிகள் கேட்கும் உரங்களை மட்டுமே வழங்கவும், பிற உரங்களை வாங்க நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும் தனியார் வியாபாரிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

மேலும், தங்குதடையின்றி, நியாயமான விலையில் யூரியா கிடைக்கவும், பிற உரங்களை போதுமான அளவுக்கு இருப்பில் வைத்துக் கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT