இளைஞரால் தீ வைக்கப்பட்ட கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனம் . 
தமிழகம்

எந்த வேலைக்குச் சென்றாலும் லஞ்சம் கேட்பதால் ஆவேசம்: கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்துக்கு தீ வைத்தவர் கைது

செய்திப்பிரிவு

கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத் திற்கு நேற்று இளைஞர் ஒருவர் வந்தார். அலுவலக வாயிலில் நின்றிருந்த வாகனத்தின் கண்ணா டியை உடைத்து வார்னீஷை வாகனத்தினுள் ஊற்றி தீ வைத்துதப்பியோடியுள்ளார். வாகனம்தீப்பற்றி எரிவதைக் கண்ட,அருகிலிருந்த சிலர் உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத் திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து போலீஸார் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர்.

பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, மர்ம நபர் வாகனத் திற்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை நடத்தியபோது, கண்டாச்சிபுரம் இந்திராநகரைச் சேர்ந்த ரஞ்சித்(25) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை பிடித்து விசா ரணை நடத்தியதில், வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த வேலைக்குச் சென்றாலும் லஞ்சம் கேட்பதாகவும், அதனால் ஆத்திரத்தில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து ரஞ்சித்தை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT