தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் “வடக்கு கடலோர தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,மதுரை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
கடலோர மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான கனமழைக்கு பெய்யும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக் கூடும்.
தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத் தீவு ஆகிய இடங்களில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிமீக்கு வீசக் கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அக்டோபர் 26 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.