புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள மெய்வழிச்சாலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று சோதனை நடத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலைப் பகுதியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரிடம் மிக நெருக்கமாக உள்ளவர் களின் வீடு, அவர்களது தொழில் நடை பெற்று வரும் இடங்களில் வாக்காளர் களுக்கு கொடுப்பதற்காக பெருந் தொகை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வும், அதை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்திருப்பதாகவும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மூலமாக தகவல்கள் வெளியாகி வரு கின்றன.
வீடியோவில் பதிவு
இந்நிலையில், அன்னவாசல் அருகே யுள்ள மெய்வழிச்சாலையில் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் சாலை மதுரம் என்பவரின் வீட்டில் சட்டவிரோத மாக பெருந்தொகை பதுக்கி வைக் கப்பட்டிருப்பதாக விராலிமலை தொகுதி யின் தேர்தல் நடத்தும் அலுவலர் வடி வேல் பிரபுவுக்கு தகவல் கிடைத்துள் ளது. அவரது உத்தரவின்பேரில், தமிழ் செல்வன் தலைமையிலான பறக்கும் படையினர் மெய்வழிச்சாலையில் உள்ள சாலை மதுரம் வீட்டில் சோதனையிட்டனர். அதை வீடியோவிலும் பதிவு செய்துள்ள னர்.
மேலும், அடுத்தடுத்த வீடுகளில் குடியிருப்போரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆனால், அங்கிருந்து பணம், பொருட்கள் உள்ளிட்ட எதையும் பறக்கும்படையினர் கைப்பற்றவில்லை.