கேரள மாநிலம் சபரிமலையில் பாயும் பம்பை ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளது என்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு தாமாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இது தொடர்பாக பதிலளிக்க கேரள அரசு தலைமைச் செயலர் மற்றும் அம்மாநில சுற்றுச்சூழல் செயலர், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவ ருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந் தது. இந்த வழக்கு, அமர்வின் நீதித் துறை உறுப்பின் நீதிபதி பி.ஜோதி மணி, தொழில்நுட்ப உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இதே பிரச்சினை தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரினர்.
அதனைத் தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து, அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.