காலிப் பணியிடங்களில் காலமுறை ஊதியத்துடன் கிராம சுகாதாரச் செவிலியரை பணியமர்த்தக்கோரி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 500 செவிலியர்கள் கோரிக்கை முழக்க முறையீட்டில் ஈடுபட்டனர்.
கிராம பகுதி, சமுதாய சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில், ‘4-வது ஊதியக்குழுவில் இருந்து தொடரும் ஊதிய சதவீத முரண்பாட்டை நீக்க வேண்டும். ஆண் பணியாளர்களுக்கு வழங்கு வது போல் பெண் பணியாளர் களுக்கும் 5 ஆண்டுகளில் நிலை-1 என்பதை வழங்க வேண்டும். வாடகையில்லா குடியிருப்பு வழங்கிட வேண்டும். காலிப் பணியி டங்களில் காலமுறை ஊதியத்துடன் கிராம சுகாதாரச் செவிலியரை பணியமர்த்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க முறையீடு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க.கோமதி தலைமையில் நடந்த கோரிக்கை முழக்கத்தில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.