பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வந்த நாளில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விஜயகாந்த், அன்பு மணியை சந்தித்துப் பேசினார். ஆனாலும் அவர்கள் எந்தப் பிடியும் கொடுக்கவில்லை.
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துவிட்டது. இதனால் தமிழகத்தில் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது.
காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜெயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் நேற்று மாலை சென்னை வந்தனர். விஜயகாந்தை அமித்ஷா சந்திக்கக் கூடும் என்றும் சில தகவல்கள் வெளியாகின. ஆனால், அமித்ஷா வரும் நாளில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது தமிழக பாஜகவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.