தமிழகத்தில் 6-வது கட்டமாக இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளக்கூடாது என்கிற தவறான தகவல் இருப்பதால், அவர்களுக்காக இந்த வாரம் சனிக்கிழமை முகாம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘தமிழக அரசிடம் 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் 57 லட்சம் பேர் உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் விவரங்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்’’ என்றார்.