தமிழகம்

மத்திய அரசைக் கண்டித்து 11 தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து சென்னை சேப்பாக் கத்தில் நேற்று தொமுச, சிஐடியு உட்பட 11 தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறியதாவது:

மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 10 ஆண்டுகளாக 12 அம்ச கோரிக்கை களை முன்வைத்து தொடர்ந்து போராடி வரு கின்றன. ஆனால், ஆளும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி, ஏமாற்றி வருகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்துவதாகக் கூறி தற்பொழுது அனுபவித்து வரும் சலுகைகளையும் உரிமைகளையும் இழப் பதற்கும், மறைமுக நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறது.

வைப்பு நிதியையும், இ.எஸ்.ஐ. திட் டத்தையும் தன் விருப்பத்துக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள் வதும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை, வைப்பு நிதியில் கொண்டு வந்து புகுத் தவும் முடிவு செய்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தம் செய்யவும், புதிய சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தில் பொதுத்துறையை அழித்து, தனி யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கை களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகுமார் (சிஐடியு), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), ராஜா தர் (எச்எம்எஸ்) உட்பட 11 தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT