தமிழகம்

காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

காடுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யா வலியுறுத்தினார்.

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ‘கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் விலங்கின பல்லுயிர் பெருக்கம்’ என்ற தலைப் பில் தேசிய அளவிலான கருத்தரங் கம், சென்னை பொருளாதார கல்வியியல் நிறுவனத்தில் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்தும் சிறப்பு மலரை வெளியிட்டும் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது:

செழுமை மிகுந்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டுக்கு பெயர்பெற்றது இந்தியா. ராமா யணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் காடுகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிய விஷயம் அல்ல.

கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புனிதம் நிறைந்த பல இயற்கை தலங்கள் பன்னெடுங்கால மாக பாதுகாக்கப்பட்டு வருகின் றன. அவை ஏராளமான தாவரங் களுக்கும் விலங்கினங்களுக்கும் வாழ்விடமாக திகழ்கின்றன. மேலும் நீர், மூலிகைகள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்களை மனிதர்களுக்கு வழங்குகின்றன.

உலகில் அரிய பல்லுயிர் பெருக் கம் நிறைந்த பன்முகத்தன்மை வாய்ந்த 12 பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலகளவில் 17 லட்சம் வகையான உயிரினங்கள் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றில் 90 ஆயிரம் உயிரினங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

இயற்கையாலும், மனிதர்களா லும் உண்டாக்கப்படும் அழிவு களால் வன உயிரினங்கள் நிறைந்த காட்டுப்பகுதிகள் சுருங்கி வருகின்றன. வெள்ளம், வறட்சி, சூறாவளி போன்றவற்றால் ஏற் படும் பாதிப்புகளை வனங்கள் கட்டுப்படுத்தி உணவுப் பாது காப்புக்கு உதவுகின்றன. பருவ நிலை மாற்றத்தையும் ஒழுங்கு படுத்துகின்றன. உள்ளூர் மக் களி்ன் உணவு, எரிபொருள் போன்றவற்றுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

சுற்றுச்சூழல் பாரம்பரியமும், சூழலியலும் மிக்க மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சுற்றுச்சூழல், தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றை பாதுகாத்து பல்லுயிர் பெருக்க தரத்தை மேம்படுத்துவது நமது தலையாய பணியாக இருக்க வேண்டும். அந்த வகையில் காடுகளை பாதுகாப்பது பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தற் போதைய தேவை ஆகும்.

இவ்வாறு ஆளுநர் ரோசய்யா பேசினார்.

SCROLL FOR NEXT