தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடக்கிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், கடந்த அக்டோபர் 6, 9 ஆகிய தேதி களில் 2 கட்டங்களாக நடந்தன. அத் துடன், இதர 28 மாவட்டங்களில் காலி யாக இருந்த உள்ளாட்சி பதவிகளுக் கான இடைத்தேர்தலும் 9-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்கு கள் 12-ம் தேதி எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்பட்டன.
தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அலுவலர்களும் அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரி வித்தனர்.
இந்த தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவந் திப்பட்டி ஊராட்சி மன்ற தலைவியாக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றி பெற்றிருந்தார். இவர் நேற்று ஊராட்சி மன்றத் தலைவராக பதவி யேற்றுக் கொண்டார்.
பல்வேறு உள்ளாட்சி அமைப்பு களில் ஓரிரு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்கவில்லை. பதவியேற்காத வர்கள், நாளைக்குள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, மறைமுக தேர்தலில் பங்கேற்குமாறு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அவ் வாறு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளாதவர்கள், 3 மாதங்களுக்குள் ளாகவோ அல்லது 20-ம் தேதிக்கு பிறகு நடைபெறும் முதல் 3 கூட்டங்களில் ஒன்றிலோ இவற்றில் எது முந்தையதோ அதற்குள்ளாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நாளை (22-ம் தேதி) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
முந்தைய உள்ளாட்சி தேர்தல்களில் பல இடங்களில் முக்கிய கட்சிகளுக்கு பெரும்பான்மை இருக்காது. உள்ளாட்சி பதவிகளுக்கு, கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் பொருந்தாது என்பதால், வெற்றி பெற்றவர்கள் கட்சி தாவுவது எளிதாக நடக்கும். இதனால், வெற்றி பெற்ற கட்சி உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர்களுக்கு மவுசு அதிகரிக்கும். தங்கள் ஆதரவு உறுப்பினர்களை சுற்றுலாத் தலங்கள், சொகுசு ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று விருத்து அளித்து கவனிப்பது போன்ற செயல்கள் நடக்கும். ஆனால், இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பெரும்பாலான இடங்களில் திமுக பெரும்பான்மை பெற்றிருப்பதால், அதுபோன்ற நிகழ்வுகளுக்கு வேலை இல்லாமல் போனது.
இருப்பினும், திமுகவுக்குள்ளேயே தலைவர், துணைத் தலைவர் பதவி களை பிடிக்க கடும் போட்டி நிலவு கிறது. இதனால், ஒருமித்த நிலையில் தலைவர், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுக்க கட்சி மேலிட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங் காயம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 உறுப்பினர்களில் 11 பேர் திமுகவை சேர்ந்தவர்கள். அங்கு ஒன்றியக் குழு தலைவர் பதவியை பிடிக்க இரு தரப்பினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். நேற்று நடந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
இதனிடையே, மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் நகர்ப் புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வரும் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலி யில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை யில் நடந்த கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம், வாக்குச் சாவடிகளை கண் டறிதல், வாக்குப்பதிவு இயந்திரங் களின் இருப்பு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி அளித்தல் ஆகியவை தொடர் பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேவையான அனைத்து முன்நட வடிக்கைகளையும் விரைந்து மேற் கொள்ளுமாறு தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களை ஆணையர் பழனிகுமார் கேட்டுக்கொண்டார்.