டாஸ்மாக் முதுநிலை மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், சிறப்புப் பறக்கும்படை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியதாவது: கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில்இருக்கும் டாஸ்மாக் கடைகளைஉடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். குறிப்பாக, தமிழக அரசுக்கு நற்பெயர் விளைவிக்கும் வகையில் அனைத்து டாஸ்மாக் அலுவலர்களும் செயல்பட வேண்டும் என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில்டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர்இல.சுப்பிரமணியன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.