அரசு மருத்துவர்களுக்கு நாட்டி லேயே தமிழகத்தில்தான் குறைந்த ஊதியம் தரப்படுகிறது என மதுரையில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் மருத்துவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
அரசு மருத்துவர்களின் கோரிக் கைகளை (12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு உள்ளிட்ட) நிறைவேற்றக் கோரி மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ராஜாஜி மருத்துவமனை சட்ட போராட்டக்குழு டாக்டர் தாகிர் பேசியதாவது: தமிழக அரசு வழிகாட்டுதலில் கரோனா தொற்றை 36 ஆயிரத்திலிருந்து தற்போது 1,500-க்கும் கீழ் குறைத்துள்ளோம். ஆனாலும் மருத்துவர்கள் கோரிக்கைகள் இதுவரை நிறை வேற்றப்படவில்லை.
சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில், அரசு மருத்துவர்களுக்கு நாட்டி லேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது. ஊதிய கோரிக்கை நிறைவேற்றப்படும் என முந்தைய ஆட்சியில் சுகாதார அமைச்சர் உறுதியளித்த பிறகும் நிறை வேற்றப்படவில்லை.
2019-ம் ஆண்டு அக்.28-ம் தேதி போராட்டத்தில் நேரடியாக வந்து தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்ததோடு மருத்து வர்கள் வருத்திக் கொள்ள வேண் டாம், திமுக ஆட்சியில் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றித் தரப் படும் என உறுதியளித்தார். இருப்பினும் இன்னும் நிறை வேற்றப்படவில்லை. அரசு மருத்து வர்கள் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற ஆண்டுக்கு கூடு தலாக ரூ.300 கோடி மட்டுமே தேவைப்படும். அதுவும் இதில் பெரும் பகுதியை மருத்துவர்களே இன்சூரன்ஸ் மூலமாக அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரமுடியும். மருத்துவர்களுக்கு அளிக்கும் ஊதியம் என்பது மக்களின் பொது சுகாதாரத்துக்கான முதலீடுதானே தவிர செலவினம் அல்ல, என்றார்.
மருத்துவர் பெருமாள் பிள்ளை உட்பட ஏராளமான மருத்துவர்கள், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.