தமிழகம்

பறக்கும்படையினர் சோதனையில் மார்ச் 15 வரை ரூ.8.52 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

செய்திப்பிரிவு

தேர்தல் தொடர்பாக பறக்கும்படையினர் சோதனையில் கடந்த 11 நாட்களில் ரூ.8 கோடியே 52 லட்சம் சிக்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தேர்தல் தொடர்பாக பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் கடந்த 15-ம் தேதி மடடும், கிருஷ்ணகிரியில் ரூ.20 லட்சம் உட்பட, பல்வேறு மாவட்டங்களில் ரூ.51 லட்சத்து 17 ஆயிரத்து 240 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர, 51 ஆயிரதது 840 மி.லி மதுபான பாட்டில்கள், 340 சர்க்கரை மூட்டைகள், வேட்டி, புடவை, டி.சர்ட்கள், 189 ஹெல்மெட்கள், 21 ரைஸ்குக்கர்கள் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டபோது சிக்கின.

நிலையான கணகாணிப்புக்குழுவினர் சோதனையின் போது, ரூ.18 லட்சத்து 40 ஆயிரத்து 295 ரொக்கம், நாகை மாவட்டத்தில் 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடற்குதிரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், 17-ம் தேதி(இன்று) வரை பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 711 புகாரகள், தனியார் சொத்துக்கு சேதம்விளைவித்ததாக 39 ஆயிரத்து 108 புகார்களும் பெறப்பட்டன. பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக 428 மற்றும் தனியார் சொத்துக்கு சேதம்விளைவித்ததாக 192 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT