சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி, அரசியல் கட்சிகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தணிப்பதற்காக, பல் வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப் படும். கடந்த ஆண்டு அரசியல் கட்சியினர், நீர்மோர் பந்தல் திறப் பதை விழாவாகவே கொண்டாடி னர். இந்நிலையில், தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசியல் கட்சிகள் நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதியில்லை என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.மதியழகன், ‘தி இந்து’விடம் கூறும்போது, “அரசியல் கட்சியினரின் நீர் மோர் பந்தல்களில், அவர்களது கட்சித் தலைவர்களின் படங்கள் இடம்பெறும். மேலும், அங்கு வாக்காளர்களுக்கு பல்வேறு பொருட்களையும் வழங்க வாய்ப்பு உள்ளது. எனவே, அரசியல் கட்சியினர் நீர் மோர் பந்தல் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.