தமிழகம்

ஆளுநருடன் பழனிசாமி இன்று சந்திப்பு

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி இன்று காலை சந்தித்துப் பேசுகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்த நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்நிலையில், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கும்போது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடக்கும் சோதனை குறித்து பழனிசாமி புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT