மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை 3 மாதத்துக்குள் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மின்வாரிய ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் கரு ணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் இந்த வருடம் முதல் ‘டான்ஜெட்கோ’ தலைமை மேலாண்மை இயக்குநரின் ஆணையின்படி புதிய வாழ்நாள் சான்று படிவம், பணியின்மை, மறு வேலைவாய்ப்பு சான்று படிவம், மணமாகாத, மறுமணம் புரிந்ததற்கான சான்று படிவங் களை ஓய்வூதியம் பெறும் வங்கியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்துக்குள் சமர்ப்பிக்கவும். இதற்கு உரிய படிவங்களை> http://www.tangedco.gov.in/lc.pdf என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட மாதங்களுக்குள் படிவங்கள் வங்கியில் சமர்ப்பிக்காவிடில் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.