சிறுநீரக மருத்துவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரனுக்கு கிரேசி மோகன் சிறப்பு விருது வழங்கப்பட்டது. 
தமிழகம்

டாக்டர் ராஜன் ரவிச்சந்திரனுக்கு கிரேசி மோகன் விருது

செய்திப்பிரிவு

புகழ் பெற்ற நாடக ஆசிரியர், நடிகர் கிரேசி மோகனின் 69-வதுபிறந்தநாள் விழா, கிரேசி கிரியே ஷன்ஸ் சார்பில் ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா ஒத்துழைப்புடன் வாணி மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பிரபல சிறுநீரக மருத்துவர் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரனுக்கு கிரேசி மோகன் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இவரது மருத்துவ சேவைகளுக்காகவும், தமது சேபியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை மூலம் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு உதவியதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது. அப்பாஸ்வாமி ரியஸ் எஸ்டேட் நிர்வாக இயக்குநர் ரவி அப்பாஸ்வாமி இந்த விருதை வழங்கினார். கர்நாடக இசைக் கலைஞர் காயத்திரி கிரீஷ், பழம்பெரும் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் தனது ஏற்புரையில், சிறுநீரக நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றியும், தமது அறக்கட்டளையால் செய்யப்படும் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

மேலும் கிரேசி மோகனுடன் இருந்த நீண்ட கால நட்புகுறித்தும், சேபியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளைக்கு அவர் தூதராகஇருந்து ஆற்றிய பணிகள் பற்றியும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

கிரேசி பாலாஜி பேசும்போது, டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் நோயாளிகளுக்கு எவ்வாறு உதவினார், எவ்வாறு பல விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்றினார், அவரது நோயறிதல் மற்றும் சிகிச்சையின் தரம் பற்றி விளக்கினார்.

இயக்குநர் எஸ்.பி.காந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் கிரேசி கிரியேஷன்ஸின் ‘கிரேசி பிரீமியர் லீக்’ நகைச்சுவை நாடகம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT