மிலாடிநபியான நேற்று பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் மதுரை கோரிப்பாளையம் தர்ஹாவுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.
பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம். இவர், நேற்று மிலாடிநபியன்று கோரிப்பாளையம் தர்ஹாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்கு போலீஸார் அனுமதி தர மறுத்தனர். ஆனாலும், அவரும், அவரோடு தமிழக சிறுபான்மையினர் அணியின் மாநிலச் செயலாளர் கல்வாரி தியாகராஜன், சிறுபான்மையினர் அணி மாவட்டத் தலைவர் செரில் ராயப்பன், அப்துல்ஹமீது, ஜூடு ஜோசப், மாரிச்செல்வம், வெங்கடேஷ், கார்விஜய்கண்ணன், கந்தசாமி ஆகியோர் தர்ஹாவுக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.