தமிழகம்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விசாரணை அறிக்கை தொடர்பாக 77 வழிகாட்டுதல்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்ற வழக்குகளின் புலன் விசாரணை அறிக்கை தொடர்பாக 77 வழிகாட்டு நெறிமுறைகளை காவல் துறை உயர் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

குற்றச் செயல்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளின் புலன் விசாரணை இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்வது வழக்கம். இதன் தன்மையை பொருத்து, சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தர முடியும்.

இந்நிலையில், இதுதொடர்பாக புலன் விசாரணை அதிகாரிகளுக்கு காவல் துறை உயர் அதிகாரிகள் 77 வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ள னர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல் தகவல் அறிக்கையில் உள்ள எதிரிகளின் பெயர்கள், சட்டப் பிரிவுகள் ஆகியவற்றை இறுதிஅறிக்கையோடு ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். எந்த எதிரியின் பெயராவது விடுபட்டிருந்தால் அதற்கான விளக்கம் இறுதி அறிக்கையில் உள்ளதா என சரிபார்க்கவேண்டும். சாட்சி பட்டியலில் உள்ளசாட்சிகளின் வாக்குமூலங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். நேரில் பார்த்தவர்கள், சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனரா என கண்டறிய வேண்டும்.

சம்பவ இடம், சாட்சிகள், ஒப்புதல் வாக்குமூலம், அதை பதிவு செய்தவர், கொலை அல்லது சந்தேகமரண வழக்குகளில் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவரின் அறிக்கை, ரசாயன பரிசோதனை அறிக்கை ஆகியவை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.

முதல் தகவல் அறிக்கையில் உள்ள பிரிவுகளில் எவை அதிகபட்ச தண்டனை கொண்ட பிரிவோ,அதை கணக்கில் கொண்டு குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 77 வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT