தமிழகம்

முத்தரையர் சங்கத்தின் ‘தேர்தல்’ கோரிக்கை

செய்திப்பிரிவு

முத்தரையர் எழுச்சி சங்கத்தின் நிறுவனத் தலைவர் பி.மாறன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் வாழும் முத்தரையர்களின் சரியான மக்கள்தொகையை ஆய்வு செய்து அரசு அறிவிக்க வேண்டும். முத்தரையர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வலையர்களுக்கு மறுவாழ்வு திட்டம் ஏற்படுத்த வேண்டும் என 1970-ம் ஆண்டு தமிழ்நாடு முதலாவது பிற்பட்டோர் நலக் குழு பரிந்துரை இன்றுவரை செயல்படுத்தவில்லை.

வரும் தேர்தலில் 23 தொகுதிகளில் முத்தரையர்களை வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும். அதேபோல 5 மக்களவை தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு முத்தரையர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும். பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையருக்கு தஞ்சாவூரில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT