வட சென்னையில் நிர்வாகிகள் சிலரை ஏற்கனவே வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கி, புதிய பதவி அளித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, வட சென்னை வடக்கு மாவட்ட அவைத் தலைவ ராக கே.பாலன், பொருளாளராக பி.காளிதாஸ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைத்தலைவர்களாக டி.கோயில்பிள்ளையும், ஏ.எல்,நடராஜனும், மாவட்ட இணை செயலாளராக ஆர்.எஸ். ஜெனார்த்தனமும், ஆர்.கே.நகர் பகுதி செயலாளராக எஸ்.சந்தானமும், ஆர்.கே.நகர் எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவராக டி.நாகப்பனும், பெரம்பூர் பகுதி செயலாளராக இ.லட்சுமி நாராயணனும், பகுதி இணை செயலாளராக ஜே.கே.ரமேசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொளத்தூர் பகுதி செயலாளராக எம்.சுந்தரும், வில்லிவாக்கம் பகுதி செயலா ளராக யு.காளிதாசும், வட சென்னை வடக்கு மாவட்டம் அதிமுக பொதுக்குழு உறுப்பினராக எஸ்.ஆர்.அண்ணாமலையும், ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி செயலாளராக பி.கார்த்தி கேயனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா வழங்கி யுள்ளார்.