தமிழகம்

ட்விட்டரில் சர்ச்சை கருத்து பதிவிட்டதாக பாஜக கல்யாணராமன் கைது

செய்திப்பிரிவு

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் கோபிநாத். வழக்கறிஞரான இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கல்யாணராமன் (55) என்பவர், தனதுட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும், மோதல் மற்றும்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். எனவே, அவர் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக18 ட்விட்களை பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் கல்யாணராமனை நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT