தமிழகம்

தமிழக ஆளுநர் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குகள்: பொதுமக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சில விஷமிகள் ஆளுநரின் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி ஆட்சேபகரமான கருத்து களை பரப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த விஷமிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் இதர சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் govtam@nic.in

அதிகாரப்பூர்வ ட்விட்டர் @rajbhavan_tn. எனவே, பொதுமக்கள் இதர போலி மின்னஞ் சல் மற்றும் டிவிட்டர் கணக்குகளை நம்ப வேண்டாம் என்றுஅறிவுறுத்தப்படுகிறார் கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT