தமிழகம்

விஜயகாந்துடன் கூட்டணி பேச்சு நடக்கிறது: வைகோ தகவல்

செய்திப்பிரிவு

விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு செல்லமாட்டார். அவருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

அவர் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் பந்தயத்தில் எல்லோரையும் முந்திக் கொண்டு மக்கள் நல கூட்டணி நிற்கிறது. மற்ற கட்சிகள் இன்னும் பிரச்சாரத்தை தொடங்கவில்லை. நாங்கள் 22 மாவட்டங்களில் 3 கட்ட பிரச் சாரத்தை தொடங்கி விட்டோம்.

18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளை ஞர்கள்தான் தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்கள். சமூகவலை தளங்களில் கருத்துகளைப் பகிர்பவர்களும், திமுக, அதிமுக கட்சிகள் வரக்கூடாது என நினைக்கின்றனர். அவர்கள் பணத்துக்கு வாக்களிக்கக் கூடாது என பெற்றோரிடம் தெரி விக்கின்றனர். இந்த சக்தி கருத்துக் கணிப்பில் இடம் பெறுவதில்லை.

தென் மாவட்டங்களில் விரை வில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளோம். மக்கள் நல கூட்ட ணியில் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையையும் விரைவில் தொடங்க உள்ளோம். எங்கள் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். ராஜீவ் காந்தி கொலை வழக் கில் கைதான நளினி உள்ளிட்ட 7 பேரை திமுக முயற்சி செய் திருந்தால் அவர்கள் ஆட்சி யிலேயே விடுவித்து இருக்க லாம். தற்போது மக்களை ஏமாற்ற முதல்வர் ஜெயலலிதா, நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகிறார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் விஜய காந்த் அதிமுக கூட்டணிக்கு சென்றார் தற்போது அதி முகவை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என நினைக் கும் அவர், திமுக கூட்டணிக்கு செல்ல மாட்டார். விஜயகாந்த் துடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். அவர் கண்டிப் பாக மக்கள் நல கூட்டணிக்கு வருவார். இவ்வாறு வைகோ கூறினார்.

SCROLL FOR NEXT