தமிழகம்

ஏடிஎம் மையத்தில் பணம் வராததால் ஆத்திரம்: கண்காணிப்பு கேமராவை திருடிய பட்டதாரி இளைஞர் கைது

செய்திப்பிரிவு

ஏடிஎம் மையத்தில் பணம் வராத ஆத்திரத்தில் அங்கு பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேம ராவை திருடிச்சென்ற பட்டதாரி இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை பெரும்பாக்கம் ஐஓபி வங்கியின் கிளை மேலாளர் பூங் கோதை (39) பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை கொடுத் தார். அந்த புகாரில், “வங்கியின் தரைத்தளத்தில் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. கடந்த 22-ம் தேதி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை மர்ம நபர் ஒருவர் உடைத்து திருடிச் சென்றுவிட்டார்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதி வான காட்சிகளை வைத்து போலீ ஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கண்காணிப்பு கேமராவை திருடிச் சென்ற சென்னை தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த பாண்டி (25) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாண்டி பி.எஸ்சி. பட்டதாரி. தனியார் நிறுவனங்களில் யுபிஎஸ் பொருத்தும் பணியை செய்து வந்துள்ளார். கடந்த 22-ம் தேதி ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். பணம் வராததால் ஆத்திரமடைந்த அவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருடி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். பயந்து போன பாண்டி மறுநாள் காலையில் திருடிய கேமராவை மீண்டும் ஏடிஎம் மையத்தில் வைத்துட்டு தலைமறைவாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பாண்டியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT