'சிங்கங்கள் மீண்டும் கர்ஜித்துள்ளன' என ஐபிஎல் கோப்பையை 4வது முறையாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மீண்டும் ஒருமுறை சிங்கங்கள் கர்ஜித்துள்ளன. நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கெ வீரர் ஒவ்வொருவருக்கும், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இந்த வெற்றியைக் கொண்டாட தோனிக்காக சென்னை அன்புடன் காத்திருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் தொடங்கிய துபாயில் முடிந்த ஐபிஎல் 2021:
2021 ஆம் ஆண்டு ஐபில் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில், கரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் துபாயில் நடைபெற்றது. போட்டியில் ஆரம்பத்திலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. நேற்று சிஎஸ்கே,
கொல்கத்தா நைட் ரைரடர்ஸ் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் சிஎஸ்கே டாஸை இழந்தது. இதனால், சிஎஸ்அணி பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. ஆனால் சிஎஸ்கே வீரர்கள் அபாரமாக ஆடி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக டூப்பிளசிஸ் 86 ரன்கள் குவித்தார். பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 20-வது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது.
கொல்கத்தாவை வென்று 4-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. டூப்பிளசிஸ் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
சிஎஸ்கேவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.