தமிழகம்

கண்ணகி நகரில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: மனித உரிமைகள் ஆணையத்தில் தாய் புகார்

செய்திப்பிரிவு

6 போலீஸாரையும் அடையாளம் காட்டத் தயார் - மனித உரிமைகள் ஆணையத்தில் தாய் புகார்

சிறுவன் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை அடையாளம் காட்டத் தயார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாநில மனித உரிமைகள் ஆணை யத்தில், சிறுவனின் தாய் மனு கொடுத்துள்ளார்.

சென்னை ஒக்கியம் துரைப் பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த முகேஷ் (17) என்ற சிறுவனை போலீ ஸார் கடந்த வாரம் கண்மூடித்தன மாக தாக்கினர். இதுதொடர்பாக சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சிறுவ னின் தாய் வி.சுமதி நேற்று புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியி ருப்பதாவது:

கடந்த 11-ம் தேதி இரவு 11 மணி அளவில், வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து கதவைத் திறந்தேன். உள்ளே புகுந்த 4 பேர் தாங்கள் போலீஸ் என்று கூறி, என் மகன் முகேஷின் (17) தலை முடியை பிடித்து தரதரவென வெளியே இழுத்துச் சென்றனர். கண் முன்னே அவனை லத்தி யால் அடித்தனர். அப்போது பைக் கில் வந்த 2 போலீஸாரும் அடித்த னர். கேள்வி கேட்ட என் கண வரை தள்ளிவிட்டு, 6 பேரும் அவனை போலீஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

என் மருமகன் பாலசுப்பிரமணி பின்தொடர்ந்து சென்றார். வேளச் சேரி ஏரிக்கரை அருகே போலீஸ் வண்டி மாயமானது. மயிலாப்பூர், அபிராமபுரம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் காவல் நிலையங்களுக்கு சென்று விசாரித்தும், மகனை காணவில்லை. இதற்கிடையில், ரத்தக் காயங்களுடன் முகேஷ் வீட் டுக்கு வந்துவிட்டதாக மூத்த மகன் போன் செய்தான். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, முகேஷ் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தான்.

‘கண்களை துணியால் கட்டி விட்டு, வண்டியில் வைத்தே அடித் தார்கள். வேறு யாரையோ பிடிப்ப தற்கு பதிலாக தவறுதலாக என்னை பிடித்துவிட்டதாக பேசிக்கொண் டார்கள். துரைப்பாக்கம் மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு போய்விட் டனர்’ என்று பின்னர் கூறினான்.

108 மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத் துச் சென்றோம். டாக்டர்கள் முதல் கட்ட சிகிச்சை அளித்தனர். ‘போலீ ஸார் அடித்ததாக பதிவு செய்ய வேண்டாம்’ என்று மருத்துவமனை போலீஸ்காரர் கூறினார். டாக்டரும் அவ்வாறு பதிவு செய்யவில்லை.

பின்னர் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றோம். தலை வீங்கியுள்ளது. காது சவ்வு கிழிந்துவிட்டது. ஆபரேஷனுக்கு நிறைய செலவு ஆகும். அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று டாக்டர்கள் கூறினர். கடந்த 14-ம் தேதி அரசு பொது மருத்துவ மனைக்கும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குமாக அலைக் கழித்தனர். சமூக ஆர்வலர்களின் முயற்சியால் கடந்த 17-ம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் உள்நோயாளியாக சேர்க் கப்பட்டுள்ளான்.

இதற்கிடையில், என் கணவ ரின் செல்போனுக்கு பேசிய போலீஸ் காரர், ‘வேளச்சேரி காவல் நிலையம் வரவும். வேறு எங்காவது சென்று எங்கள் மீது புகார் செய்தால், உன்னையும், மகனையும் குற்ற வழக்குகளில் சேர்த்துவிடுவேன்’ என்று மிரட்டினார்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT