தமிழகம்

1 கோடி ஸ்மார்ட்போன் திட்டம்: அதிமுக மீது அன்புமணி புகார்

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான செயல்திட்டம் குறித்த கலந்து ரையாடலுக்காக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘அதிமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அது இந்த தேர்தலில் பிரதிபலிக்கும். விஜயகாந்த் தனித்துப் போட்டி அறிவிப்புக்கு பின்னர் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேமுதிகவின் முடிவு எங்களுக்கு சாதகமான தீர்வாக கருதுகிறோம். என்றாலும், தேமுதிகவின் முடிவு மீது எங்களுக்கு முழு நம்பிக்கையில்லை.

ஆளுங்கட்சி தரப்பில் வாக்குகளுக்காக 1 கோடி இளைஞர்களுக்கு ‘ஸ்மார்ட் போன்’ டோர் டெலிவரியாக கொடுக்க ஒரு செல்போன் விநியோக நிறுவனத்திடம் பேசியுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு செல்போன் ஆர்டர் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுப்போம்’ என்றார்.

SCROLL FOR NEXT