சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். உடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன். 
தமிழகம்

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: நீட் தேர்வு மசோதா குறித்து ஆலோசித்ததாக தகவல்

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமாலை சந்தித்துப் பேசினார். கிண்டியில் உள்ள ஆளுநர்மாளிகையில் நடைபெற்ற இந்தச்சந்திப்பின்போது நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் உடனி ருந்தார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக,ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி கடந்த செப்.18-ம்தேதி பதவியேற்றார். அதன்பிறகுசில வாரங்களில் டெல்லி சென்றஆளுநர் ரவி, குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் அக்கட்சியி்ன் தமிழகத் தலைவர்கள் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்திருப்பதாகவும், திமுக எம்பி.க்கள் மீதான குற்ற வழக்குகளில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் மனு அளித்தனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை 5 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். அப்போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் உடனிருந்தார். ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு அவரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பது இதுவே முதல்முறை.

நீட் சட்ட மசோதா

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்கவகை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநருடன் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்குவிவகாரம், சமீபத்தில் தேசியபுலனாய்வு முகமையால் (என்ஐஏ)தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT